திருக்குறள் சொல்லும் நெறிகள்- திருவள்ளுவரின் குறள் வழியிலான அறிவுரைகள்

 குறள் சொல்லும் நெறி

முயற்சிச் சிறப்புடையோரை விட மேம்பட்டவர்

அறத்தின் இயல்போடு இல்வாழ்க்கை வாழ்பவர்

வானுலகத்தில் உள்ள தெய்வத்துக்கு இணையாக மதிக்கப்படுபவர்

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவர்.

முகமலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்வது

சினம்

உலகத்தின் இயல்பு இரண்டு வகைப்படும்

செல்வம் உடையவர் அறிவுரையவராக இருப்பதில்லை

தெளிந்த அறிவுடையோர் செல்வமுடையவராக இருப்பதில்லை.

மக்களுக்கு இயற்கை அறிவு எதனால் ஏற்படும்

மனத்தால்

நீரில் மூழ்கிய ஒருவரைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றதாகும்

கள்ளுண்டு மயங்கியவனிடம் நல்லன சொல்லித் திருத்த முயல்வது

மலையின் மாண்பைக் காட்டிலும் பெரியது

நேர்வழி மாறாது அடக்கமாய் இருப்பவனின் உயர்வு

யாரிடம் உள்ள செல்வம் தன் எல்லா உறுப்புகளையும் மருந்தாகத் தரும் மரத்தைப் போன்றது

பெருந்தகையாளனிடம் உள்ள செல்வம்

யாரை துன்பம் வருத்த வருத்த ஞானம் வளரும்

தவமிருப்பவரை

படைக்குப் பாதுகாப்பு

வீரம், மானம், முன்னோர் வழியில் நடத்தல், நம்பிக்கைக்கு உரியவர் ஆதல் ஆகிய நான்கு

மருத்துவம் எத்தனை வகையில் அடங்கும்

நோயாளி, மருத்துவர், மருந்து, மருந்தாளுநர் ஆகிய நான்கு வகையில் அடங்கும்.

கொடாமை என்னும் பாறை மோதினால் உடைவது

பிறரை எதிர்பார்த்து இரந்து வாழ்தல் என்னும் பாதுகாப்பற்ற படகு.

உயிரினும் மேலானதாகப் பேணிக் காக்க வேண்டியது

ஒழுக்கம்

எப்போது பல நூல்களைக் கற்றாராயினும் அறிவு இல்லாதவராக கருதப்படுவார் ?

உலகத்தோடு ஒத்து வாழக் கல்லாதார்.

எப்போது ஒரு மன்னன் பகைவர் இன்றியும் தானே கெடுவான்

குற்றங் கண்டபொழுது இடித்துக் கூறும் பெரியாரைத் துணைக்கொள்ளாத பாதுகாப்பற்ற மன்னன்

வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்வதற்கு நிகரானது எது?

அரசன் தன் அதிகாரத்தைக் கொண்டு வரிவிதிப்பது

பாடலோடு பொருந்தா இசையும்,

இரக்கம் இல்லாத கண்களும்

பயனில்லை

இவ்வுலகமே உரிமை உடையதாகும், யாருக்கு?

நடுநிலையாக கடமை தவறாமல் இரக்கம் காட்டுபவருக்கு

இழிவானது எது?

அறிய வேண்டியதை அறிந்து முயற்சி செய்யாதது

ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றதாகும்

பிறருக்கு உதவி செய்யாதவர் பெற்ற செல்வம்.

யார் அமைச்சர்?

தொழில் செய்யத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து செயல் செய்பவர்

எது ஒருவர்க்கு அறத்தையும் தரும்; இன்பத்தையும் தரும்

நல்வழியில் சேர்த்த பொருள்

பகைவரை வெல்லும் கூர்மையான ஆயுதம்

ஒருவர் பொருளை ஈட்ட வேண்டும்.  அவருடைய பகைவரை வெல்லும் கூர்மையான ஆயுதமாகும்.

யாருடைய குடி உயர்ந்து விளங்கும்

விடா முயற்சி, சிறந்த அறிவாற்றல் இவ்விரண்டையும் இடைவிடாமல் பின்பற்றுபவர்

யார் தேவர்களைப் போல, தாம் விரும்புவனவற்றைச் செய்து ஒழுகுவர்?

கயவர்

கரும்பைப் பிழிவது போல நெருக்கிப் பிழிந்தால்தான் பயன்படுவர்

கயவர்

எது தலைசிறந்தது?

தன்னை இகழ்பவரைப் பொறுப்பது

யாரை பொறுமையால் வெல்ல வேண்டும்?

செருக்கினால் துன்பம் தந்தவரை

எது ஆராய்ந்து அறியும் உரைக்கல்?

ஒருவரின் செயல்பாடுகளே

தீராத துன்பம் தருவது

ஆராயாமல் ஒருவரைத் தேர்வு செய்வதும், அவரைப் பற்றி ஐயப்படுதலும்

யாருடைய நட்பு கனவிலும் இனிமை தராது?

செயல் வேறு, சொல் வேறு என்று உள்ளவர் நட்பு

பேதையின் செயல்கள்

தகாத செயலுக்கு வெட்கப்படாமை, தக்கவற்றை நாடாமை, பிறரிடம் அன்பு இல்லாமை, ஏதொன்றையும் பாதுகாக்காமை ஆகியவை

யாருடைய உயிர், சாகும்வரை உள்ள நோய் !

சொன்னாலும் செய்யாமல், தானாகவும் செய்யாமல் இருப்பவன் உயிர்

இன்பத்தில் சிறந்த இன்பம் பெறலாம் எப்போது?

துன்பத்தில் மனக்கசப்பு என்னும் மோசமான துன்பம் மறைந்தால்,

யார் கோடிப் பொருள் அடுக்கிக் கொடுத்தாலும், தவறு செய்வதில்லை?

ஒழுக்கமான குடியில் பிறந்தவர்

சான்றாண்மையைத் தாங்கும் தூண்கள்

பிறரிடம் அன்பும், பழிக்கு நாணுதல், சமத்துவ எண்ணம், இரக்கம், உண்மை ஆகியவை

சான்றோர்க்குப் பகைவரையும் நட்பாக்கும் கருவி எது?

செயல் செய்பவரின் ஆற்றல், பணிவுடன் நடத்தல் ஆகியவை

யார் உலகத்துக்கு அச்சாணி போன்றவர்

உழுபவர்

புலித்தோலை போர்த்திக்கொண்ட பசு பயிரை மேய்ந்ததைப் போன்றது

மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவரின் வலிய தவக்கோலம்

எது அரசரை காப்பாற்றும்?

அரசரின் குற்றமற்ற ஆட்சி

அரசனின் கடமை

ஒருவர் செய்த குற்றத்தை முறையாக ஆராய்ந்து அவர் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தண்டிப்பது.

சிறந்த சொல்லாற்றலின் இயல்பு

கேட்பவரைத் தன்வயப்படுத்துவதும் கேளாதவரைக் கேட்கத் தூண்டுவதும்

ஆண்மை

பகைவரை எதிர்த்து நிற்கும் வீரத்தை ஆண்மை என்பர்

ஆண்மையின் கூர்மை

பகைவருக்கும் துன்பம் வரும்போது, உதவி செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்பர்.

யாருடைய நட்பு பழகப் பழக இன்பம் தரும்

பண்புடையவர் நட்பு

வறுமை வந்த காலத்தில் எப்படி வாழவேண்டும்?

ஊக்கம் குறையாமல் பெருமித உணர்வுடன் வாழவேண்டும்

சான்றோரால் ஆராயப்படுவது

பொறாமை கொண்டவருடைய செல்வமும்,

பொறாமை இல்லாதவருடைய வறுமையும்

வாய்மை எனப்படுவது

மற்றவர்க்கு ஒரு தீங்கும் தராத சொற்களைச் சொல்லுதல்

யார் உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பார்?

உள்ளத்தில் பொய் இல்லாமல் வாழ்பவர்

சிறந்த அரசின் செயல்

பொருள் வரும் வழிகளை அறிதல்,

அவ்வழியில் பொருளை சேர்த்தல்,

சேர்த்த பொருளை பாதுகாத்தல்,

காத்த பொருளைப் பயனுள்ள வகையில் திட்டமிட்டுச் செலவிடுதலும்

வாழும் மக்களுக்கு கண்கள் போன்றது

எண்ணும் எழுத்தும்

பெய்யாது கெடுப்பதும், பெய்து காப்பதும்

மழை

யார் தம் உடம்பும் பிறர்க்கே என்பார்?

அன்புடையவர்

ஒருவர்க்கு மிகச் சிறந்த அணி

பணிவும் இன்சொல்லும்

எந்த செல்வம் வளர்வது போலத் தோன்றினாலும் முடிவில் அழிந்துவிடும்

களவு மூலம் சேர்க்கப்படும் செல்வம்

நிலையான செல்வம்

ஊக்கம்

ஆக்கம் யாரிடம் வழிகேட்டுச் செல்லும்

தளராத ஊக்கம் உடையவனிடம்

எந்த அளவிற்கு மனிதர்கள் உயர்வார்கள்

தாம் கொண்ட ஊக்கத்தின் அளவிற்கு

சிறந்த அறம்

உள்ளத்தில் குற்றம் இல்லாமல் இருப்பது

ஈகை

இல்லாதவர்க்கு தருவதே

அறநூல்களில் கூறப்படும் அறங்களுள் சிறந்தது

தம்மிடம் இருப்பவற்றைப் பிற உயிர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துக் காப்பாற்றுதல்