பாரதியார் - பள்ளிப் பாடப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ள பாரதியார் பற்றிய குறிப்புகளின் தொகுப்பு



"தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்திடுவோம்"

இயற்பெயர் சுப்பிரமணியன்.

  • பிறப்பு  11.12.1882 (எட்டையபுரம்)
  • இறப்பு 12.09.1921 (திருவல்லிகேணி, சென்னை)


மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

  • இளமையிலேயே கவிபாடும் திறன் பெற்றவர்.
  • எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர்.
  • நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா, சிந்துக்குத் தந்தை என்றெல்லாம் பாராட்டப்பட்டவர்.
  • நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றைப் படைத்தவர்.
  • எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர்.
  • பாட்டுக்கொருப் புலவன் எனப் பாராட்டப்பட்டவர்.
  • இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்.
  • தம் கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர்‘

  • மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர்.

  • 11-ஆவது வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி ’பாரதி’ என்னும் பட்டம் பெற்றவர்.


பாரதியின் இதழியல் பணிகள்

  • பாரதியார் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்.

  • உதவி ஆசிரியர் - சுதேசமித்திரன் இதழில்

  • ஆசிரியராகவும் துணை ஆசிரியராகவும் - சுதேசமித்திரன், சக்ரவர்த்தினி, இந்தியா (சிவப்பு வண்ணத்தாளில் எழுதப்பட்டது), விஜயா, பாலபாரதி (அ) யங் இந்தியா, சூர்யோதயம், கர்மயோகி இதழ்களில்,

  • தன் படைப்புகள் வெளியிட்ட இதழ்கள்

    • சர்வஜன மித்திரன், 
    • ஞனபாநு, 
    • காமன்வீல், 
    • கலைமகள், 
    • தேசபக்தன், 
    • கதாரத்னாகரம் 

  • "தான்" என்ற ஒன்றை அழித்தவர் பாரதியார்.

  • புனைப்பெயர்கள்

    • இளசை சுப்ரமணியன், 
    • சாவித்திரி, 
    • சி.சு. பாரதி, 
    • வேதாந்தி, 
    • நித்திய தீரர், 
    • உத்தமத் தேசாபிமானி,
    • ஷெல்லிதாசன், 
    • காளிதாசன், 
    • சக்திதாசன், 
    • ரிஷிகுமாரன், 
    • காசி, 
    • சரஸ்வதி, 
    • பிஞ்சுக்காளிதாசன், 
    • செல்லம்மா, 
    • கிருஷ்ணன்

  • தமிழ் இதழியல் துறையில் முதன்முதலாக கருத்துப் படங்களை அறிமுகப்படுத்தியவர்.

  • தமிழில் "சித்திராவளி" என்ற பெயரில் கருத்துப்படங்களை மட்டுமே கொண்ட இதழ் ஒன்றை நடத்த விரும்பினார்.  அதைச் செயல்படுத்த முடியாவிட்டாலும் இந்தியா (சிவப்பு வண்ணத்தாளில் எழுதப்பட்டது), விஜயா ஆகிய இரு இதழ்களிலும் கருத்துப் படங்களை வெளியிட்டுள்ளார்.

  • பாரதியாரிடம் துணையாசிரியர்களாக பணியாற்றியவர்கள்

    • பி.பி. சுப்பையா, 
    • ஹரிஹரர், 
    • என். நாகசாமி, 
    • வ. ராமசாமி, 
    • பரலி, 
    • சு. நெல்லையப்பர், 
    • கனகலிங்கம்
  • தமிழ் இதழ்களில், தமிழ் ஆண்டு, திங்கள், நாள் ஆகியவற்றை முதன்முதலாகக் குறிப்பிட்டவர்.  மேலும், தமிழில் தலைப்பிடுவதற்கும் பாரதியே முன்னோடி.
  • இதழ்களில் தலைப்பிடுவதை "மகுடமிடல்"  என்று பாரதி கூறுகின்றார்.
  • இந்தியா, சக்ரவர்த்தினி போன்ற இதழ்களில் 1905-1907 காலப்பகுதியில் ஆங்கிலத் தலைப்பையும் கலந்து பயன்படுத்திய பாரதியார், பிறகு ஆங்கில தலைப்பு வைப்பதை கைவிட்டதோடு சுதேசமித்திரனில் அதைச் சாடியும் எழுதினார்.


பாரதியின் குறள் வெண்பா (சக்ரவர்த்தினி இதழில் வெளியிட்டார்)

பெண்மை அறிவயரப் பீடோங்கும் பெண்மைதான் 
ஒண்மை யுறஓங்கும் உலகு.                 - பாரதியார்

சிவப்பு வண்ணத்தாளில் இந்தியா இதழ்

காரணம் - சிவப்பு புரட்சியையும் விடுதலையையும் குறிப்பது என்பதால்

பாரதி தன் மனைவி செல்லம்மாவை, கண்ணம்மா, வள்ளி என்ற புனைப்பெயர்களிலேயே குறிப்பிட்டிருந்தார்.

பாரதி கடிதங்கள் என்ற நூலின் ஆசிரியர் - ரா.அ. பத்மநாபன்.

"சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்" - பாரதி

  • கவிஞர், கட்டுரையாளர், எழுத்தாளர், சமூக சீர்திருத்தச் சிந்தனையாளர்,
  • விடுதலைப் போராட்ட வீரர்.
  • கேலிச்சித்திரம் - கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்,
  • சிறுகதை ஆசிரியர், இதழாளர், 
  • சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும், பெண்ணடிமைத்தனத்தையும் தன் பாடல்களில் எதிர்த்து எழுதியவர்.
  • கைப்பொருள் அற்றான் கற்ப தெவ்வகை? - பாரதியார்

இயற்றிய காவியங்கள்
  • குயில்பாட்டு, 
  • பாஞ்சாலி சபதம்

குழந்தைகளுக்கான நீதிப் பாடல்கள்
  • கண்ணன் பாட்டு, 
  • பாப்பா பாட்டு, 
  • புதிய ஆத்திச்சூடி

உரைநடை நூல்கள்
  • சந்திரிகையின் கதை, 
  • தராசு,

  • இந்தியா, சுதேசமித்திரன் முதலிய இதழ்களின் ஆசிரியராக பணியாற்றியவர்
  • இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி விடுதலைப் போருக்கு வித்திட்டவர்.
  • வசனக் கவிதை வடிவம் (Prose Poetry) (Free verse) தமிழில் பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதைவடிவம் வசனகவிதை எனப்படுகிறது.
  • தீ போல் சினம் என்பதைச் சினத்தீ என்பார் பாரதியார்.

எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தார் அப்பா
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்  - பாரதியார்


பாரதியாரை,

சிந்துக்குத் தந்தை (பாராட்டியவர் - பாரதிதாசன்)
செந்தமிழ்த் தேனீ (பாராட்டியவர் - பாரதிதாசன்)
புதிய அறம் பாட வந்த அறிஞன், (பாராட்டியவர் - பாரதிதாசன்)
மறம் பாட வந்த மறவன்  (பாராட்டியவர் - பாரதிதாசன்)


கூடியவரை பேசுவதுபோலவே எழுதுவதுதான் உத்தமம் - பாரதியார்
எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்துவிட்டால் நல்லது - பாரதியார் கட்டுரைகள்

பாரதியார் இறக்கும் பொழுதும் இதழாளராகவே இறந்தார்.
  • இறந்து போவதற்கு முதல்நாள் இரவு, தூங்கச் செல்லும் முன்பு, நாளைக்கு, "அனானுல்லாகானைப் பற்றி ஒரு வியாசம் எழுதி ஆபிசுக்கு எடுத்துக்கொண்டு போகவேண்டும்" என்று இறுதியாகப் பாரதியார் கூறியுள்ளார்.
கடிதங்களில் பாரதி (நெல்லையப்பருக்கு எழுதியது)
  • தம்பி- தமிழ்நாடு வாழ்க என்றெழுது.
  • தமிழ்நாட்டில்  நோய்கள் தீர்க என்றெழுது.
  • உனக்கு சிறகுகள் தோன்றுக. பறந்து போ.
  • தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது.
  • ஆணும் பெண்ணும் ஓருயிரின் இரண்டு தலைகள் என்றெழுது.
  • பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக் குத்திக் கொண்டான் என்றெழுது.
  • பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது.


பாரதியாரின் பாடல் வரிகள்

  • "வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"
  • உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும் ஓட்டி மகிழ்ந்திடுவோம்.
  • பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு பாடுவதும் வியப்போ?
  • மகரந்தத் தூளைச் சுமந்து கொண்டு, மனத்தை மயலுறுத்து கின்ற இனிய வாசனையுடன் வா.
  • மெதுவாக, நல்ல லயத்துடன், நெடுங்காலம் நின்று வீசிக் கொண்டிரு.

வாழ்க நிரந்தரம் வாழ்க-தமிழ்மொழி வாழிய வாழியவே!
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி இசைகொண்டு வாழியவே!
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையகமே!
வானம் அறிந்த  தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே!

"காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும்.
நல்ல முத்துச் சுடர் போலே - நிலவொளி முன்பு வரவேணும்.
கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதில் படவேணும்.
என்றன் சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாய் இளம் தென்றல் வரவேணும்".

வானை அளப்போம் கடல் மீனையளப்போம்!
சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம் !
சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.!

"கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்".
"சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்"


"சுட்டும் விழிச்சுடர்தான் - கண்ணம்மா
சூரிய சந்திரரோ?
வட்டக் கரியவிழி - கண்ணம்மா
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப் புடவை
பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் - தெரியும்
நட்சத்திரங்களடி..."      (கண்ணம்மா என் காதலி - பாரதி)    


"பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்-புவி பேணி வளர்த்திடும் ஈசன்,
மண்ணுக்குள்ளே சிலமூடர் - நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்.
கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்தி காட்சி கெடுத்திட லாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம் பேதமை யற்றிடும் காணீர்."

"எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா"

"தமிழா! பயப்படாதே.
வீதிதோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்"

"தேடுகல்வி இலாததோர் ஊரைத் தீயினுக்கு இரையாக மடுத்தல்"

"பெண்மை வெல்க என்று கூத்திடுவோம்".

"வெட்டியடிக்குது மின்ன - கடல் வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;
கொட்டி யிடிக்குது மேகம் - கூ கூவென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா - என்று தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத்திசையும் இடிய - மழை எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா!