Agriculture - வேளாண்மை

 


சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
                                                                -குறள் 1031
  • தற்போது தமிழகத்தில் 7 வேளாண் காலநிலை மண்டலங்கள் (Agro Climatic Zones), பல்வேறு விதமான மண் வகைப்பாடுகள், தட்பவெப்பச் சூழலுக்கேற்ப வளரும் பயிர்வகைகள், வேறுபடும் மழையளவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, உழவர்கள் உயர் விளைச்சல் பெரும் நோக்கத்தில் புதிய இரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் பரிந்துரைக்கப்பட்டு, அவர்களின் வருமானத்தை அதிகரித்து வாழ்க்கைத்தரத்தை உயர்த்திட வழிவகை செய்யப்பட்டு வருகின்றது.

வேளாண் உற்பத்தித் திறனில்
தேசிய அளவில் தமிழ்நாட்டின் நிலை

முதலிடம்

எண்ணெய் வித்துக்கள், நிலக்கடலை, கரும்பு, கேழ்வரகு

இரண்டாம் இடம்

மக்காச்சோளம்

மூன்றாம் இடம்

தென்னை

நான்காம் இடம்

அரிசி, குறுதானியங்கள்

ஆதாரம்: வேளாண்மைத்துறை கொள்கை விளக்கக்குறிப்பு – 2024-25

  • தமிழக அரசு பொதுமக்கள் மற்றும் உழவர் பெருமக்களுக்காக இணையம் வழியே பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அவற்றுள்,

 அக்ரிஸ்நெட் வலைதளத்தில்,

            வேளாண் மண்டலங்கள், பல்வேறு வகையான பயிர்களின் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன், மழையளவு, நீர் ஆதாரங்கள் போன்ற கீழ்க்காணும் தகவல்கள் பொது மக்கள் எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

  • வேளாண் மண்டலம் (காலநிலை)
  • பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் (புள்ளிவிவரங்கள்)
  • மழையளவு (தினசரி மழையளவு – அனைத்து மாவட்டங்கள்)
  • நீர்ஆதாரங்கள்
    (முக்கிய அணைகளின் கொள்ளளவு, நீர்அளவு)

 

திட்டங்கள் குறித்த பகுதியில்,

வேளாண்மைத் துறை செயல்படுத்திவரும் அனைத்துத் திட்டங்கள் அவற்றின் திட்டங்களின் மானியம் மற்றும் அவற்றை பெறுவதற்கான தகுதி மற்றும் தேவையான ஆவணங்கள் ஆகியவை பொதுமக்கள் எளிதாக தெரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

     விவசாயிகள் பகுதியில் பின்வரும் தகவல்கள் உழவர்கள் எளிதான முறையில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் உள்ளது.

  • தமிழ்மண்வளம்
    (மண் தகவல்கள் மாவட்ட மண் வள நிலவரம்)
  • இடுபொருள்முன்பதிவு
    (மானியத் திட்டங்கள் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம்)
  • விவசாயத்திற்கானமின்னணு நாட்காட்டி
  • விதைஇருப்பு விவரம்
    (மாவட்ட வாரியாகவும், பயிர் வாரியாகவும்)
  • உர இருப்பு நிலவரம்
  • உரவிலை நிலவரம்
  • பூச்சித்தாக்குதல் விவரங்கள்
    (பயிர் வாரியாக பூச்சி தாக்குதல்களை கட்டுப்படுத்தும் வழிகள்)
  • நோய்த்தாக்குதல் விவரங்கள்
    (பயிர் வாரியாக நோய்த் தாக்குதல்களை கட்டுப்படுத்தும் வழிகள்)
  • பயிர்காப்பீடுநிலை
    (பயிர் காப்பீட்டு விபரம் தெரிந்துகொள்ள)
  • உழவர்அலுவலர் தொடர்பு திட்டம்
    (உங்கள் ஊர்: உங்கள் வேளாண் அலுவலர்)
  • நேரடிகொள்முதல் நிலையங்கள்
    (மண்டலம் வாரியாக)
  • விளைப்பொருளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை
  • பயிர் வாரியான விதை அட்டவணைகள் 2023-24

 

 இ-சிட்டிசன் பகுதியில்,

  • தகவல்அறியும் உரிமைச் சட்டம் -2005 (RTI)
    (துறைத் தலைமை, மாவட்ட மற்றும் வட்ட அளவிலான பொதுத்தகவல் அலுவலர்கள் விவரம் உள்ளது)
  • சட்டம்மற்றும் விதிகள் (Act and Rules)
    (பயிர்கள் மற்றும் உரம் தொடர்பான சட்டங்கள்)
  • மக்கள்சாசனம் (Citizen Charter)
    (வேளாண்மை-உழவர் நலத்துறையின் மக்கள் சாசனம் பதிவிறக்கம்செய்ய)
  • அரசாணைகள்(G.O.s)
    (வேளாண் துறை தொடர்புடைய முக்கிய அரசாணைகள்)
  • ஒப்பந்தபுள்ளி (Tender)

     மேற்காணும் தகவல்கள் விவசாய பெருமக்கள், பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வெழுதும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில், முக்கிய அணைகளின் கொள்ளளவு விவரங்கள் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலை, போன்ற விவரங்களை அக்ரிஸ்நெட் இணையதளம் வாயிலாக அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ளது.