தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி வகைகளும் அதன் மருத்துவப் பயன்களும் Traditional Rice of Tamil Nadu

    தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி வகைகளும் அவைகளின் மருத்துவப் பயன்கள் குறித்து அறிந்துகொள்ளலாம் வாருங்கள்!!!

1. கருப்புக் கவுணி அரிசி 

(புற்றுநோயை தடுக்கும் அரிசி வகை)


  • ஒரு காலத்தில் அரசர்களும் அவர்களின் குடும்பத்தினர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த ஓர் அரிசி வகை/
  • மருத்துவ குணம் அதிகம் நிறைந்த  மற்றும் அரிசி வகைகளிலேயே மிக உயர்ந்த அரிசி வகை.
  • கருப்பு நிறத்திற்கு காரணம்:
    • அந்தோசயனைன் (Anthocyanin) என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளதால் கருப்பு நிறத்தில் உள்ளது.

இதிலுள்ள சத்துக்கள்

    • புரதம்
    • நார்சத்து
    • இரும்புச் சத்து
    • வைட்டமின் E
    •  ரிபோப் பிளோவின்
    • நியாசின்
    • லுடீன்
    • கால்சியம்
    • மெக்னீசியம்
    • ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்
    • அமினோ அமிலங்கள்

கருப்புக் கவுணி அரிசியின் மருத்துவப் பயன்கள் 

  • புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் உள்ளது.
  • செரிமானத்தை சீராக்கும்.  இதில் அதிகளவு நார்ச்சத்து  (100 கி. அரிசியில் 4.9 கி நார்ச்சத்து) உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு வராமல் தடுக்கும்.
  • உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும்.  இதனால், இருதயம் சார்ந்த நோய்களை வராமல் தடுக்க உதவும்.
  • கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும்.
  • மூளை மற்றும் நரம்பு மண்டல செயல்பாடுகளை ஊக்குவிக்கும்.
  • இரத்தச் சோகையை குணமாக்கும்.  இதில் 100கி. அரிசியில் 2.2 கி.  இரும்புச் சத்து உள்ளது.
  • இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்களுக்கு இந்த அரிசி வகை மிகவும் நல்லது.
  • உடல் எடையை குறைக்கும்.
  • மன அழுத்தத்தை குறைக்கும்.    மேலும், ஆரோக்கியமான இரத்த அழுத்த அளவை பராமரிக்கும்.
  • நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
  • உடற்சோர்வு, அசதியை தடுத்து, உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது.
  • பெண்களுக்கு கருப்பை ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
  • தலைமுடி உதிர்வை தடுக்கும்.  தோல்களில் ஏற்படும் அலர்ஜியை குணமாக்கும்.
  • கண் பார்வை திறனை அதிகரிக்கும்.
  • எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்கிறது.


2. மாப்பிள்ளை சம்பா அரிசி 

(உடல் பலத்தை அதிகரிக்கும், ஆண்மை குறைபாடு போக்கும் அரிசி)


  • சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்த வகை அரிசி தமிழகத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகம் விளைகிறது.
  • பயிர் வளர்ச்சி காலம்  160 நாட்கள்
  • இரத்தச் சக்கரை அளவு அதிகமுள்ளவர்கள் உண்ணக்கூடியி அரிசி வகை.  இது Low Glycemic Index உடையது.

சத்துக்கள்

    • நார்ச்சத்து, 
    • புரதம், 
    • இரும்புச் சத்து, 
    • துத்தநாகம், 
    • வைட்டமின்பி.6 
    • வைட்டமின் பி.12 

மாப்பிள்ளை சம்பா அரிசியின் மருத்துவப் பயன்கள் 

  • செரிமானத்தை அதிகரிக்கும்.
  • குடல்புண், வயிற்றுப்புண் குணமாகம்.
  • இதில் இரும்புச் சத்து அதிகமுள்ளது.  
  • இரத்தத்தில், ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.  இதனால், உடல் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும்.
  • தசைகள் நரம்புகள் பலப்படும்.
  • இது Low Glycemic Index உடையது என்பதால், சாப்பிடும் உணவானது குளுகோஸாக மாறுவதற்கான நேரம் அதிகமாகும்.  இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக அதிகரிப்பதில்லை.
  • உடல் சூட்டை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது.


3. பூங்கார் அரிசி (பெண்களின் அரிசி)


  • இது பார்ப்பதற்கு மாப்பிள்ளை சம்பா அரிசி தோற்றத்தில், வெளிர் சிவப்பு நிறத்தில் காணப்படும் இவ்வகை அரிசியில் தனிமச் சத்துக்கள் அதிகம் உள்ளன.
  • இது வறட்சி மற்றும் வெள்ளத்தை தாங்கி வளரும் தன்மை வாய்ந்தது.

பூங்கார் அரிசியின் மருத்துவப் பயன்கள்

  • பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் பிரச்சனை அனைத்தும் தீரும்.  கர்ப்பிணிப் பெண்களுக்கான அரிசி வகை.  இந்த அரிசியில் கஞ்சி வைத்து குடித்துவர, சுகப்பிரசவம் ஏற்படும்.
  • தாய்ப்பால் நன்றாக சுரக்கச் செய்யும்.
  • இதில் வைட்டமின் பி.1 உள்ளதால் உடலில் அல்சர் வராமல் பாதுகாக்கும்.
  • உடலுக்கு பலத்தை கொடுக்கும்.
  • பூங்கார் அரிசியில் நார்ச்சத்து அதிகம்.
  • குடல் கட்டிகளை கரைக்கும் தன்மை இதற்கு உண்டு.
  • இரத்தில் ஹீமோகுளோபின் அளவை பராமரிக்கும்.
  • பக்கவாதத்தை குணப்படுத்தும் மேலும், வராமல் தடுக்கும் ஆற்றல் உள்ளது.