பாரதிதாசன் - பள்ளிப் பாடப்புத்தகங்களில் (School Books) இடம் பெற்றுள்ள பாரதியார் பற்றிய குறிப்புகளின் தொகுப்பு


பாரதிதாசன் இயற்பெயர் - கனக. சுப்புரத்தினம்

பிறப்பு  - 29.04.1981
இறப்பு - 21.04.1964


புரட்சிக் கவி, பாவேந்தர்

  • பாரதியின் மீது கொண்ட ஈர்ப்பினால் பாரதிதாசன் என்று தம்பெயரை மாற்றிக் கொண்டார்.
  • கவிஞர், இதழாளர், தமிழாசிரியர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர்.
  • கவிதை, கதை, கட்டுரை, நாடகம் ஆகியவற்றைப் படைப்பதில் வல்லவர்.
  • தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளை பாடு பொருளாகப் பாடியுள்ளார்.



பாரதிதாசன் படைப்புகள்
    • பாண்டியன் பரிசு
    • அழகின் சிரிப்பு
    • இருண்ட வீடு
    • குடும்ப விளக்கு
    • தமிழியக்கம்
    • இசையமுது
    • கண்ணகி புரட்சிக் காப்பியம்
    • தமிழச்சியின் கத்தி 
    • எதிர்பாராத முத்தம்
    • சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 
    • வீரத்தாய்
    • புரட்சிக்கவி
    • பிசிராந்தையார் (நாடக நூல்) (சாகித்திய அகாதெமி விருது)

  • குடும்ப விளக்கு (ஐந்து பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது)
(கும்ப உறவுகள் அன்பு என்னும் நூலால் பிணைந்துள்ளதை உணர்த்துகிறது.
கற்ற பெண்ணின் குடும்பமே பல்கலைக்கழகமாக மிளிரும் என்பதைக் காட்டுகிறது.)

பாரதிதாசன் வரிகள் / கவிதைகள்

"ஆபர ணங்கள் இல்லை யானால் - என்னை 
    யார் மதிப்பார் தெருவில் போனால்?"

"கற்பது பெண்களுக்கா பரணம் - கெம்புக் 
    கல்வைத்த, நகைதீராத ரணம்!
கற்ற பெண்களை இந்த நாடு - தன் 
    கண்ணில் ஒற்றிக் கொள்ளுமன் போடு!"


தாங்கெட நேர்ந்த போதும் 
தமிழ்கெட லாற்றா அண்ணல் 
வேங்கட சாமி என்பேன்
விரிபெரு தமிழர் மேன்மை
ஓங்கிடச் செய்வ தொன்றே 
உயிர்ப்பணியாகக் கொண்டோன் 
வீங்கிட மாட்டான் கல்வி 
விளம்பரம் விழைதல் இல்லான் - பாரதிதாசன்.

"அறைக்குள் யாழிசை 
ஏதென்று சென்று 
எட்டிப் பார்த்தேன்; 
பேத்தி, 
நெட்டுருப் பண்ணிளாள் 
நீதிநூல் திரட்டையே."


"பொங்கியும் பொலிந்தும் நீண்ட புதுப்பிடர் மயிர்சிலிக்கும் 
சிங்கமே! வான வீதி திகுதிகு எனஎ ரிக்கும் 
மங்காத தணற்பி ழம்பே! மாணிக்கக் குன்றே! தீர்ந்த
தங்கத்தின் தட்டே!  வானத் தகளியிற் பெருவி ளக்கே!"


"கடலிலே கோடி கோடிக் கதிர்க்கைகளை ஊன்று கின்றாய்
நெடுவாளில் கோடி கோடி நிறைசுடர்க் கைகள் நீட்டி
இடைப்படு மலையோ காடோ இல்லமோ பொய்கை ஆறோ
அடங்கநின் ஒளிஅ ளாவ அமைந்தனை! பரிதி வாழி!"


"எத்தனைப் பெரிய வானம், 
எண்ணிப்பார் உனையும் நீயே,
இத்தரைப், கொய்யாப் பிஞ்சு, 
நீ அதில் சிற்றெறும்பே, 
அத்தனைப் பேரும் மெய்யாய் அப்படித் தானே மானே!"

"எளியநடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்
    இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்.
வெளியுலகில், சிந்தனையில் புதிதுபுதிதாக
    விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்கள் எல்லாம் கண்டு 
தெளிவுறுத்தும் படங்களொடு சுவடிஎலாம் செய்து
    செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்."

இன்பத்தமிழ்க் கல்வி


"ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட, 
    என்னை எழுதென்று சொன்னது வான்"

"ஆடும் மயில் நிகர் பெண்களெல்லாம் உயிர் 
    அன்பினைச் சித்திரம் செய்க என்றார்."

"வேலைச் சுமந்திடும் வீரரின் தோள் உயர் 
    வெற்பென்று சொல்லி வரைக----"

"இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர் 
    என்றுரைக்கும் நிலை எய்தி விட்டால், 
துன்பங்கள் நீங்கும் சுகம் வரும் நெஞ்சினில் 
    தூய்மை உண்டாகிடும்  வீரம் வரும்!"


"பெண்எனில் பேதை என்ற எண்ணம்
இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும்
உருப்படல் என்பது சரிப்படாது."

"பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில் 
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே"

"நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்."

விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை

மானுட சமுத்திரம் நானென்று கூவு
புவியை நடத்து; பொதுவில் நடத்து!


பாரதிதாசன், பக்கிங்காம் கால்வாயில் மயிலை சீனி. வேங்கடசாமி, ப. ஜீவானந்தம், உள்ளிட்ட நண்பர்களுடன் படகுப் பயணம் செய்திருக்கும் போது பாடிய பாடல்... 

"சென்னையிலே ஒருவாய்க்கால் புதுச்
சேரி நகர் வரை நீளும்.
அன்னதில் தோணிகள் ஓடும் - எழீல்
அன்னம் மிதப்பது போல.
என்னருந் தோழரும் நானும் - ஒன்றில்
ஏறி யமர்ந்திட்ட பின்பு
சென்னையை விட்டது தோணி - பின்பு
தீவிரப் பட்டது வேகம்"

(இதனை ’மாவலிபுரச் செலவு’ எனும் தலைப்பில் கவிதையாக்கியிருக்கிறார்)



அந்தியிருளாற் கருகும் உலகு கண்டேன்
    அவ்வாறே வான் கண்டேன், திசைகள் கண்டேன்
பிந்தியந்தக் காரிருள்தான் சிரித்த துண்டோ?
    பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான்
சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம்
    சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி
இந்தாவென் றேஇயற்கை அன்னை வானில்
    எழில்வாழ்வைச் சித்தரித்த வண்ணந் தானோ ?


குடும்ப விளக்கு

"கல்வி இல்லாத பெண்கள்
    களர்நிலம் அந்நி லத்தில்
புல்விளைந் திடலாம் நல்ல
    புதல்வர்கள் விளைதல் இல்லை
கல்வியை உடைய பெண்கள்
    திருந்திய கழனி அங்கே
நல்லறிவு உடைய மக்கள்
    விளைவது நவில வோநான்!"

"வானூர்தி செலுத்தல் வைய
    மாக்கடல் மழுது மளத்தல்
ஆனஎச் செயலும் ஆண்பெண்
    அனைவர்க்கும் பொதுவே!"


  "  -------கல்வி இல்லா
மின்னாளை வாழ்வில் என்றும்
    மின்னாள் என்றே உரைப்பேன்!"

"சமைப்பது தாழ்வா? இன்பம்
    சமைக்கின்றார் சமையல் செய்வார்!"

"உணவினை ஆக்கல் மக்கட்கு!
     உயிர்ஆக்கல் அன்றோ? வாழ்வு
பணத்தினால் அன்று வில்வாள்
    படையினால் காண்ப தன்று!"

"தணலினை அடுப்பில் இட்டுத்
    தாழியில் சுவையை இட்டே
அணித்திருந் திட்டார் உள்ளத்(து)
    அன்பிட்ட உணவால் வாழ்வோம்!"

"தமிழ்த்திரு நாடு தன்னில்
    இருக்குமோர் சட்டந் தன்னை
இமைப் போதில் நீக்கவேண்டில்
    பெண்கல்வி வேண்டும் யாண்டும்!"