திருக்குறளும் அணியிலக்கணமும் (குறளும் அணியும்)

குறளும் அணியும்

    

    இப்பதிவில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான திருக்குறளில் இடம்பெற்றுள்ள அணிகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.  இதனைப் படித்து பயனடையுங்கள்...

திருக்குறள் குறித்த மேலும் அறிய

  அணி- அழகு                                      

                    உவமை அணி

அணிகளில் இன்றியமையாதது உவமையணி ஆகும். மற்ற அணிகள் உவமையிலிருந்து கிளைத்தவையாகவே உள்ளன.
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.        (உவமை அணி)
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலம்தீமை யால்திரிந்து அற்று.         (உவமை அணி)

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.         (உவமை அணி)

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி.         (உவமை அணி)

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துநீர் பெய்திரீஇ யற்று.         (உவமை அணி)

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.         (உவமை அணி)

சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.         (உவமை அணி)

மக்களே போல்வர் கயவர்; அவரன்ன
ஒப்பாரி யாம்கண்ட தில்.         (உவமை அணி)

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை.         (உவமை அணி)

நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று.         (உவமை அணி)

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.         (உவமை அணி)

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.         (உவமை அணி)

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.        (உவமை அணி)

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடன்உறைந் தற்று.         (உவமை அணி)

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்கு.         (உவமை அணி)


                ஏகதேச உருவக அணி

சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்.         (ஏகதேச உருவக அணி)

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.         (ஏகதேச உருவக அணி)

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ(டு)
ஐந்துசால்பு ஊன்றிய தூண்.         (ஏகதேச உருவக அணி)

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்(கு)
ஆழி எனப்படு வார்.         (ஏகதேச உருவக அணி)

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.        (ஏகதேச உருவக அணி)


        சொற்பொருள் பின்வரும் நிலையணி

(ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லும் பொருளும் பின்னர்ப் பல இடங்களிலும் வருவது)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.         (சொற்பொருள் பின்வரும் நிலையணி)

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.         (சொற்பொருள் பின்வரும் நிலையணி)

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.         (சொற்பொருள் பின்வரும் நிலையணி)

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்.         (சொற்பொருள் பின்வருநிலை அணி)

இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.         (சொற்பொருள் பின்வருநிலை அணி)

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாந் தலை.         (சொற்பொருள் பின்வருநிலையணி)

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.             (சொற்பொருள் பின்வருநிலையணி)

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.         (சொற்பொருள் பின்வருநிலையணி)


                பிறிது மொழிதல் அணி

கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து.         (பிறிது மொழிதல் அணி)

கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் எந்தல் இனிது.         (பிறிதுமொழிதல் அணி)

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.             (பிறிது மொழிதல் அணி)

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.        (பிறிதுமொழிதல் அணி)


            வேற்றுமை அணி

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.         (வேற்றுமை அணி)


        சொல் பின்வரும் நிலையணி

(ஒரு செய்யுளில் முன்வந்த சொல்லே பின்னும் பலவிடத்தும் வந்து வேறு பொருள் உணர்த்துவது)

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.         (சொல் பின்வரும் நிலையணி)

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.         (சொல் பின்வரும் நிலையணி)

  

 பொருள் பின்வரும் நிலையணி

(ஒரு செய்யுளில் முன்வந்த ஒரு சொல்லின் பொருளே பின்னரும் பல இடங்களில் வருவது)
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.             (பொருள் பின்வருநிலையணி)


            உருவக அணி

(உவமை, உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது)

இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.             (உருவக அணி)


        வஞ்சப் புகழ்ச்சி அணி

(புகழ்வது போலுப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதும்)

தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
மேவன செய்தொழுக லான்.         (வஞ்சப் புகழ்ச்சி அணி)


        இல்பொருள் உவமை அணி

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.         (இல்பொருள் உவமை அணி)


            தொழில் உவமை அணி

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்துஒழுகு வார்.         (தொழில் உவமை அணி)


            எடுத்துக்காட்டு உவமையணி

பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.         (எடுத்துக்காட்டு உவமையணி)


            நிரல்நிறை அணி

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.             (நிரல்நிறை அணி)